RCB அணியின் புதிய கேப்டன் இவர்தான் - இந்த முறையாவது கப் கிடைக்குமா?

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2025
By Karthikraja Feb 13, 2025 06:54 AM GMT
Report

RCB அணியின் புதிய கேப்டனாக ராஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல்லில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தாலும், அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளது. 

rajat patidar rcb captain - ராஜத் படிதர்

2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்த விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து, கடந்த 3 சீசன்களாக ஃபாப் டூ பிளிஸ்சிஸ் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

ராஜத் படிதர்

இவரது கேப்டன்ஸியில் 3 முறையும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. இதனால் இவரே 2025 ஆம் ஆண்டு கேப்டனாக தொடர்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் அவரை எடுக்கவில்லை. 

இந்நிலையில் அணியின் அடுத்த கேப்டன் யார் மீண்டும் கோலியே கேப்டனாக நியமிக்கப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ராஜத் படிதரை கேப்டனாக நியமித்துள்ளது ஆர்சிபி அணி நிர்வாகம்.  மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரஜத் படிதார், 2021 ஆம் ஆண்டு, பெங்களூர் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட லுவ்னித் சிசோடியாவுக்கு பதிலாக மாற்று வீரராக பெங்களூர் அணிக்காக 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், மத்தியபிரதேச அணி கேப்டனாக இருந்து அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். 2022 ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிராக பிளே ஆஃப் போட்டியில், 112 ரன்களை குவித்து, அணியின் முக்கிய வீரராக மாறினார்.