ஐபிஎல் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி..!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன் எடுத்து அவுட்டானார். இதையடுத்து வந்த கேப்டன் சாம்சன் 32 ரன்களில அவுட்டானார்.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.
கேப்டன் கே.எல்.ராகுல் 110 ரன்களில் ஆட்டமிழந்தார்.தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 59 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தோல்யடைந்தது. இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.