தகாத உறவு: 3 வயது மகளைக் கொன்று ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசிய தாய்!
3 வயது குழந்தையை கொன்று ஓடும் ரயிலிலிருந்து தூக்கி தாய் எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ராஜஸ்தான், ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் வசிப்பவர் சுனிதா. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவனை விட்டு பிரிந்து வாழும் சுனிதா 2 குழந்தைகளையும், அவருடைய கணவர் 3 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், சுனிதாவுக்கு சன்னி என்ற நபருடன் திருமணம் மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் 3 வயது பெண் குழந்தை கிரண் தொல்லையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
குழந்தை கொலை
அதனால் இருவரும் அந்தக் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். மகள் கிரணை கழுத்தை நெரித்து கொலைசெய்து உடலை ஒரு போர்வையில் போர்த்தி ரயில் நிலையத்துக்கு எடுத்துச் சென்று ஒரு கால்வாயில் தூக்கி எறிந்துள்ளனர்.
ஆனால்,உடல் கால்வாயில் விழாமல், தண்டவாளத்துக்கு அருகிலேயே விழுந்திருக்கிறது.
தகவலறிந்து வந்த போலீஸார் உடலை அடையாளம் கண்டு தாயிடன் விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.