பள்ளியில் பெண் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம் - வீடியோ பரவியதால் நடவடிக்கை
பள்ளியில் பெண் ஆசிரியயை முத்தமிட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஆசிரியை
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் சலேரா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர், அங்குள்ள மற்றொரு பெண் ஆசிரிய யை தனது அறையில் வைத்து கட்டியணைப்பது, முத்தமிடுவது மற்றும் பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இடை நீக்கம்
மேலும், தனது அறையில் வைத்து புகையிலை பொருளை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தலைமையாசிரியர், பெண் ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய மாவட்ட கல்வி அதிகாரி, "இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.