‘’உள்ள வந்தா அதிரடி அண்ணன் யாரு ‘’ சஞ்சு சாம்சனை தக்கவைக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Sanju Samson Rajasthan Royals IPL 2022
By Irumporai Nov 26, 2021 01:43 PM GMT
Report

15-வது ஐபிஎல் சீசனில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வருகிற சீசன் முதல் 10 அணிகள் களம் காண இருக்கின்றன.

வீரர்களுக்கான ஐபிஎல் ஏலம் வருகிர டிசம்பரில் நடக்கவிருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நவம்பர் 30-ம் தேதிக்குள் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், அணியின் உரிமையாளர்கள் தங்களின் ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றனர்.

இதில் சென்னை அணி ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டனான தோணி மற்றும் 2021 ஐபிஎல்லில் பட்டத்தை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்கவைத்துள்ளனர், நான்காவது வீரருக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் சஞ்சு சாம்சனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக அந்த அணியின் நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளார்.