என்னம்மா இப்படி பண்றீங்களேமா : சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இரண்டு மடங்கு அபராதம்

sanjusamson rajasthanroyals 24lakhfined
By Irumporai Sep 25, 2021 05:53 PM GMT
Report

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பந்துவீசுவதற்குக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தாண்டி ராஜஸ்தான் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் தொடந்து இரண்டாவது முறையாக இதே தவறைச் செய்ததால் சாம்சனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்குக் குறைந்தபட்சம் தலா ரூ. 6 லட்சம் அல்லது தனிநபர் ஆட்டக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.