வீசுனதும் வீசுன வேகமா வீசிற்கலாம்ல..ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

IPL 2021 Sanju Samson Rajasthan Royals
By Thahir Sep 22, 2021 09:22 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில், நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லீவிஸ், 36 ரன்களும், ஜெய்ஸ் வால், 49 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்து தந்தனர்.

வீசுனதும் வீசுன வேகமா வீசிற்கலாம்ல..ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் | Rajasthan Royals Ipl 2021 Sanju Samson

மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 43 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால், நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் 185 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.

இதனையடுத்து 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 67 ரன்களையும், ராகுல் 33 பந்துகளில் 49 ரன்களையும் குவித்தனர். அடுத்த தாக மார்கிராம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடியின் அதிரடி காரணமாக அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

வீசுனதும் வீசுன வேகமா வீசிற்கலாம்ல..ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் | Rajasthan Royals Ipl 2021 Sanju Samson

முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.