ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து : புது மாப்பிள்ளை உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழப்பு

rajasthankotaaccident carfallsinchambalriver 9dead newlywedgroomdied
By Swetha Subash Feb 20, 2022 08:23 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள சம்பல் ஆற்று மேம்பாலம் வழியாக திருமண விருந்துக்காக புது மாப்பிளை உட்பட 9 பேர் குடும்பமாக மாதாபூரிலிருந்து உஜ்ஜைனிக்கு காரில் சென்று கொண்டிருந்த நிலையில்,

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து : புது மாப்பிள்ளை உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Rajasthan Newly Wed Groom Dead In Chambal River

கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தை தாண்டி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் நாயபுரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனே காவல் துறையினர் மீட்புப் படையினரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி புது மாப்பிள்ளை உட்பட காரில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிரேன் இயந்திரத்தின் உதவியுடனும் படகு மூலமாகவும் மீட்புப் பணி நடைபெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.