'’உங்க ரோடு கத்ரீனா கன்னம் மாதிரி சும்மா வழுவழுன்னு இருக்கணும்” : சர்ச்சை பேச்சால் சிக்கலில் சிக்கிய அமைச்சர்

viralvideo katrinakaif rajasthanminister
By Irumporai Nov 25, 2021 05:19 AM GMT
Report

பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள காங்கிரஸ் எம். எல்.ஏ. ராஜேந்திர சிங், ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா.

கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மந்திரியான பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் ​​கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார்

 அபோது, உதய்புர்வாட்டியில் மக்கள் முன்பு அனல் பறக்க பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் இங்கு சாலைகள் கொடூரமாக இருக்கின்றன.வெறும் பள்ளம் மேடு என புகார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மேடையிலேயே பேசிய அமைச்சர், அங்கு இருந்த அரசு பொறியாளர்களை குறிப்பிட்டு, இது என்னுடைய தொகுதி. இங்குள்ள சாலைகள் நடிகை காத்ரீனா கைஃப் கன்னம் போக வழுவழுப்பாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் கடும் விமர்சங்களை சந்தித்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள்  பலரும், சாலையின் தரத்தை ஒப்பிட ஒரு பெண்ணின் கன்னம்தான் அமைச்சருக்கு கிடைத்ததா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாலையின்  தரத்தை  நடிகையின் கன்னத்தோடு ஒப்பிடுவது இவர் மட்டும்அல்ல. 2005ம் ஆண்டு கூட்டத்தில் பேசிய லல்லு பிரசாத் யாதவ் நான் உபியில் ஹேம மாலியின் கன்னத்தை போல வழுவழுப்பான சாலையை போடுவேன் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.