அரசு வேலைக்காக பிறந்த பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி : பதறவைக்கும் கொடூர சம்பவம்

Rajasthan
By Irumporai Jan 24, 2023 04:57 AM GMT
Report

ராஜஸ்தானில் அரசு வேலை போய்விடும் என்ற பயத்தால் பிறந்த பெண்குழந்தையினை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் கொடூர சம்பவம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் ஜவர்லால் மேக்வால் , இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜஸ்தானில் மூன்றாவதாக குழந்தை பிறந்தால் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்பது அந்த மாநிலத்தின் முக்கிய அரசு விதியாக உள்ளது.

அரசு வேலைக்காக பிறந்த பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி : பதறவைக்கும் கொடூர சம்பவம் | Rajasthan Man Throws Baby Gvt Job

 பிறந்த குழந்தையினை கொன்ற கொடூரம்

ஆகவே வேலை இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் ஜவர்லால் மேக்வாலும் அவரது மனைவியும் தங்களது ஐந்து மாதக் குழந்தையினை கால்வாயில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இதில் தொடர்புடைய தம்பதிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற குழந்தையினையே வேலைக்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.