கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்த பெண் - வைரலாகும் புகைப்படம்...!
ராஜஸ்தான் மாநிலத்தில் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்த பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்த பெண்
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா சிங் (30). இவர் கடவுள் விஷ்ணுவை கடந்த டிசம்பர் 8ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இத்திருமணத்தில் கணேஷ் பூஜை முதல் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன. இத்திருமணத்தில் மாப்பிள்ளை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். இந்த தனித்துவமான திருமணத்தில், பூஜா தானே விஷ்ணுவின் பெயரில் சந்தனத்தை வைத்துக் கொண்டார்.
இது குறித்து பூஜா பேசுகையில், நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என்னை மக்கள் கிண்டல் செய்தனர். இதனால், நான் அலுத்துவிட்டேன். என்னுடைய திருமணத்தைப் பற்றி மக்கள் பேசுவதை நிறுத்தவே கோவிலில் அமர்ந்து கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன்.
சிறுவயதில் இருந்தே பெற்றோருக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதால் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன் என்றார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கபோல கமெண்ட் செய்து வருகின்றனர்.

Rajasthan Woman marries Lord Vishnu. Reason - family pressure to get married, but social media trolling her pic.twitter.com/RZR0soL8LC
— Sunder Barange (@sunder_barange) December 16, 2022