ராஜஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

People Rajasthan Earthquake
By Thahir Nov 20, 2021 02:33 AM GMT
Report

ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்மாநிலத்தின் ஜோலூர் மாவட்டத்தை மையமாக கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2.26 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.