கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன நடந்தது?

Cricket Tamil nadu India Sports
By Jiyath Mar 04, 2024 08:41 AM GMT
Report

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா 40 வயதில் காலமானார்.

ரோஹித் ஷர்மா

ரஞ்சிக்கோப்பையின் மூலம் கடந்த 2004-ம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் அறிமுகமானவர் ரோஹித் ஷர்மா. பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வு அறிவித்தார்.

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன நடந்தது? | Rajasthan Cricketer Rohit Sharma Dies At 40

இதுவரை 7 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 12.76 சராசரியுடன், 166 ரன்களை எடுத்துள்ளார். மேலும், ராஜஸ்தான் அணிக்காக 28 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 850 ரன்களை அடித்துள்ளார். அதில் 2 சதம், 3 அரை சதங்களும் அடங்கும். அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக 4 டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களை அடித்துள்ளார்.

காலமானார் 

இதனையடுத்து வாய்ப்பு கிடைக்காததால் 2017-ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றார். இதனையடுத்து 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சி அகடமியை துவங்கிய ரோஹித் ஷர்மா பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன நடந்தது? | Rajasthan Cricketer Rohit Sharma Dies At 40

இந்நிலையில் அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் காலமானதா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

40 வயதாகும் ரோஹித் ஷர்மாவுக்கு சில ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. அவர் உயிரிழந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.