ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 24 மணி நேரத்தில் உயிருடன் மீட்ட வீரர்கள்

borewelldeath borewellaccident
By Petchi Avudaiappan Feb 25, 2022 07:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுவன் 24 மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில்  குட்டு என்று நான்கு வயது சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது  தவறுதலாக 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறுதலாக குட்டு  விழுந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்த சிகார் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஆழ்துளைக்கிணற்றிற்கு அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பாதுகாப்பாக இருக்க குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டான். இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடர்ந்தது. இதில் ஈடுபட்ட பேரிடர் மீட்புப்படையினர், நேற்றூ இரவு 7 மணியளவில் வெற்றிகரமாக சிறுவனின் இடத்தை அடைந்து பத்திரமாக சிறுவனை மீட்டனர்.. 

இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.