பசுவதை செய்பவர்களை கொல்லுங்கள்.. 5 பேரை கொலை செய்தோம்'' - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
பசுவதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள் என ராஜஸ்தான் பாஜக பிரமுகர் கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு
ராஜஸ்தான் மாநில பாஜக பிரமுகர் கியான் தேவ் அஹூஜா , பேசுகையில் பசுவதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள் என கூறியுள்ளார்.

பசுவதை செய்பவர்களை கொல்லுங்கள்
மேலும் ,நாங்கள் இதுவரை ஐந்து பேரைக் கொன்றோம். லாலாவண்டி, பெஹ்ரோர் ஆகிய பகுதிகள் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன என ரக்பர் கான் மற்றும் பெஹ்லு கான் கொலை செய்யப்பட்டதை நேரடியாக சுட்டி காட்டி பேசியுள்ளார்.
சனிக்கிழமையன்று இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A பிரிவின் கீழ், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.