ஜெய்ஹனுமான் சொல்லு... ஏழை அப்பாவிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர்கள் - பதற வைக்கும் வீடியோ...!
ஜெய்ஹனுமான் சொல்லு என்று கூறி ஒரு ஏழை அப்பாவிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் ராஜஸ்தானையே உலுக்கியுள்ளது.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ராஜஸ்தானில் ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை 2 நபர்கள் சேர்ந்து காட்டுமிராண்டிகளாக தாக்குகின்றனர். அந்த ஏழைப்பெண்ணை ஜெய்சிறீராம், ஜெய்ஹனுமான் சொல்லு என்று கூறி... உருட்டுக் கம்பியால் தாக்குகின்றனர். வலி தாங்க முடியாமல் அந்த ஏழைப் பெண் துடிக்கிறார்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களின் நெஞ்சம் சற்றே பதை, பதைத்து விடுகிறது. இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சி நெஞ்சைப் பதற வைக்கிறது. ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை இரண்டு காட்டுமிராண்டிகள் ஜெய்சிறீராம், ஜெய்ஹனுமான் சொல்லும்படி உருட்டுக் கம்பியால் தாக்குகின்றனர். மதவெறி எப்படி மனிதனை ஆக்குகிறது என்பதற்கு ஆர்எஸ்எஸின் உற்பத்திகளான இந்தப் பித்துக்குளிகளே சான்றாகும்.#RSS #VCK pic.twitter.com/ML0B9EaOq5
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 13, 2022