ராஜஸ்தான் மாநிலத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ..!
ராஜஸ்தான் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என பலரது கேள்வியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, குஜராத், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநிலங்களிலும் 12-ம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹரியானா, கோவா அரசும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
