பாலைவன பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - போர்வெல் போட்டதால் நிகழ்ந்த அதிசயம்

India Rajasthan Borewell
By Karthikraja Dec 31, 2024 04:00 PM GMT
Report

போர் போடும் தண்ணீர் பெருக்கெடுத்து அந்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

போர் போடும் பணி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் வசித்து வரும் விக்ரம் சிங்கிற்கு சொந்தமான நிலத்தில் கடந்த சனிக்கிழமை(28.12.2024) காலை 10 மணியளவில் போர் போடும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 

jaisalmer borewell incident

அப்போது 850 அடிக்கு போர் போடப்பட்டிருந்த போது தண்ணீர் வெளி வர தொடங்கியதை பார்த்து அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெள்ளம்

திடீரென 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சீறி பாய ஆரம்பித்து அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தில் போர்வெல் போட பயன்படுத்திய 22 டன் கொண்ட இயந்திரங்கள் சிக்கின.

2 நாட்களாக தண்ணீர் இது போல் வெளியே வந்ததாகவும், போர் போடப்பட்ட பகுதியை சுற்றிலும் 15-20 அடி அகலத்தில் ஆழமான பள்ளம் உருவாகியுள்ளது. பூமியில் இருந்து எரிமலை வெடிப்பது போல் தண்ணீர் சீறி பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். 

jaisalmer borewell incident

பாலைவன பகுதி வெள்ளக்காடாக மாறியதை பார்க்க சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.

சரஸ்வதி நதி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு பொதுமக்கள் வரும் வகையில் தடுப்பு அமைத்ததோடு, 500 மீட்டர் சுற்றுப்பகுதிக்கு மக்கள் வர தடை விதித்துள்ளனர். 

இந்த இடம், பழமையான சரஸ்வதி நதி நீரோட்டம் பெற்ற பகுதியாக இருக்கலாம் என்று பலரும் கருதி வரும் நிலையில், அது பற்றி எந்த ஆய்வு முடிவும் இல்லை என்றும், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.