ராஜா ராணி-2 சரவணனுக்கு இப்படி ஒரு நிலைமையா? - ரசிகர்கள் அதிர்ச்சி
ராஜா ராணி 2 சீரியலில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி-2 மிக முக்கியமானது. இதன் முதல் பாகத்தில் நடித்த நடிகர் சஞ்சீவ், உடன் நடித்த நடிகை ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனை தொடர்ந்து இந்த சீரியலின் 2 ஆம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது.
இதில் சந்தியா என்ற ரோலில் நடித்து வந்த ஆல்யா மானசா தற்போது 2வது முறை கர்ப்பமாகியுள்ள நிலையில் சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை ரியா புதிதாக வந்துள்ளார். இந்த சீரியலில் நடிகர் சித்து ஆல்யாவின் கணவரான சரவணன் ரோலில் நடித்து வந்தார்.
ஆல்யாவுக்காகவே இந்த சீர்யலை பார்த்தவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் சீரியலில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மாமூல் வசூலித்து மார்க்கெட்டில் அராஜகம் செய்வதர்களை தைரியமாக சரவணன் தட்டிக்கேட்க கடைசியில் அவர் கடையில் போதை பொருள் வைத்ததாக பொய் குற்றச்சாட்டு வைத்து சரவணனை கைது செய்வது போல காட்டியுள்ளனர். விஷயம் தெரிந்து சந்தியா உடனே போய் சரவணனை பார்க்கிறார்.
இப்படியான சமயத்தில் சரவணன் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வந்தால் இதுப்போல் பொய் வழக்குகள் குறையும் என்கிறார். தனது கணவருக்காக போலீஸ் ஆக சந்தியா முடிவு எடுக்கிறார் . இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவழியாக சந்தியா போலீஸ் ஆகப் போகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
Ethirneechal: பதிவு செய்யப்பட்ட அன்பு தர்ஷன் திருமணம்.... கேள்விக்குறியாகிய பார்கவி வாழ்க்கை Manithan