மாமன்னர் ராஜராஜசோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Nov 02, 2022 10:28 AM GMT
Report

மாமன்ன்ர் ராஜராஜசோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு விழாவாக அறிவிப்பு 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Rajarajacholan

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

மேலும் தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.