மகனுக்காக உயிரை விட்ட தந்தை! மகனை காப்பாற்ற முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக தொட்ட மகனை காப்பாற்ற முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டியை சேர்ந்த திருமுருகன் என்பவரின் 5 வயது மகன், வீட்டிற்கு அருகே அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை தவறுதலாக தொட்டு மின்சாரம் தாக்கி அலறியுள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அவனை தள்ளியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக, அந்த மின் கம்பி, திருமுருகன் மீது விழுந்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே மாதிரி பல்வேறு
இடங்களில் மின் கம்பிகள் அறுந்துள்ளதால், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை IBC Tamil