ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கையால் பரபரப்பு

By Jon Jan 05, 2021 01:50 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே இவர் கடந்த டிசம்பர் 15ம் தேதி 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது உடல் ஏற்பட்டு ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு தந்து உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் முடிவைக் கைவிடுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் தலையில் இடி போல் விழுந்தது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் வரும் 30ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் தெரியவருகிறது.

அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறி கலந்து கொள்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.