ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களை கிளற வேண்டாம்- கமல்ஹாசன்

kamal rajani poltical
By Jon Jan 12, 2021 09:02 AM GMT
Report

ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களை தொடர்ந்து கிளற வேண்டாம். அவரது ஆரோக்கியம் தான் முக்கியம், என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறினார். கோவையில் நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மையத்துக்கு, மனுநீதி அறக்கட்டளை அமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

இது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என, தான் கூறிய விஷயங்கள் தற்போது அரங்கேறி வருவதாக கூறிய கமல்ஹாசனிடம் நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை பற்றி கேள்வியெழுப்பினர் செய்தியாளர்கள்.

அதற்கு பதில் கூறிய கமல்ஹாசன் ரஜினிகாந்தின் அறிக்கை அவருடையது என்றும் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் எனக்கு நல்ல நண்பர்.

அவரது ஆரோக்கியம் தான் முக்கியம். அவர் கூறிய விஷயங்களை தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.என அவர் கூறினார்.