ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சி: ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடங்கினர்

political rajani party
By Jon Jan 13, 2021 11:53 AM GMT
Report

ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சியை தொடங்கி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் அவர்கள் தான் உறுதி என முதன்முதலில் 2017ம் ஆண்டு தெரிவித்தார். ஆனால் நீட இடைவெளிக்குப் பிறகு அதன் பணியை கடந்த 2020ம் ஆண்டு தொடங்கினார்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில் நாங்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து புதிய கட்சி தொடங்கியுள்ளோம்.

அனைத்து இந்திய ரஜினி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியலில் குதித்து மக்கள் சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளோம். கட்சி கொடி, சின்னம், கொள்கை தொடர்புடைய மற்ற விஷயங்கள் பற்றி மக்கள் மற்றும் ரசிகர்களிடம் கருத்துக்கேட்டு, கன்னியாகுமரியில் வைத்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.