#அரசியலுக்கு வாங்க ரஜினி: ரசிகர்களின் கோஷத்தால் அதிர்ந்த போராட்டம்

rajani-bjp-party-political-tamilnadu-fans
By Jon Jan 10, 2021 02:51 PM GMT
Report

ரஜினிகாந்தின் அரசியல் முடிவை மறுபரீசிலனை செய்யக்கோரியும், அரசியலுக்கு வர அழைப்புவிடுத்தும் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

காவல்துறையின் அனுமதியுடன் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 ணி வரை ஆன்மீக அரசியல் அழைப்பு விழா என்ற பெயரில் போராட்டம் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

'மாத்துவோம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்' , 'தலைவா தமிழகம் காக்க வா', 'எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்கவா' 'தலைவா வா' போன்ற கோஷங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

வெறும் போராட்டம் மட்டும் என்றில்லாமல் கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் எல்லாம் நடந்தது. சிலர் ரஜினி உடல்நலம் சீராக வேண்டி மொட்டை போட்டுக்கொண்டனர், அத்துடன் ரஜினியின் திரைப்பட பாடலுக்கு நடனமும் ஆடினர்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் #அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் வைரலானது குறிப்பிடத்தக்கது.