ரஜினி ரசிகர்கள் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி!
ரஜினி ரசிகர்களின் போராட்டத்திற்கு, காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என அறிவிப்பு வெளியிட்டார்.
இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்ள் சிலர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, சமூக வலை தளங்களில் ரஜினி ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு அழைத்து தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் இந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் சென்னையில் நாளை அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் சென்னை வரஉள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி "ஆன்மீக அரசியல் அழைப்பு விழா" என்ற பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நாளை நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.