கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - ராஜன் செல்லப்பா பெருமிதம்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மதுரை திருப்பரங்குன்றத்திற்குட்பட்ட மேல அனுப்பானடி, சிந்தாமணி உள்ளிட்ட இடங்களில் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி ராஜன்செல்லப்பா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, “பிச்சைக்காரர்களை ஒழிப்பதாக கூறினார்கள், கண்னொளி திட்டம், 2 ஏக்கர் நிலம் என எதிர்க்கட்சிகள் எதையும் செய்யவில்லை.
மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தாய்மார்களின் வரவேற்புக்கு மத்தியில் எந்த எதிர்க்கட்சிகளும் என்னை வெல்ல முடியாது.
கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வடபழஞ்சியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேல அனுப்பானடி பகுதியில் மருத்துவமனை விரிவாக்கம் பாதாள சாக்கடை அனைத்தும் சீரமைத்துத் தரப்படும்.

ஜே.ஜே. நகர் பகுதியில் 478 குடும்பங்களுக்கு நிலப்பட்டா வாங்கிக் கொடுக்கப்பட்டு ஜே.ஜே. நகர் பகுதி ஜே!ஜே! என்று இருக்கிறது. மேலும் இங்கே பட்டா இல்லாத மக்களுக்கு நிச்சயமாக பட்டா வழங்க முயற்சிப்பேன்.
காவல்துறையில் பெண் காவலர்கள் பணியாற்றலாம் என்ற ஒரு நிலையை உருவாக்கியது அதிமுக அரசு. இன்று திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் வாக்களிக்கின்றனர்” என்றார்