மதுரை அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா வரிசையில் நின்று வாக்களித்தார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா வரிசையில் நின்று தனது வாக்கு பதிவு செய்தார். இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தற்போது பசுமலை பகுதியிலுள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் பொது மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.

அவருடன் அவரது மகன் ராஜ்யத்தில் மற்றும் அவரது குடும்பத்தினரும் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.