பாகுபலி பாகம் 3 அப்டேட் ; கார்ட்டூனில் ஹீரோ தோனியா? உண்மையை உடைத்த ராஜமவுலி!
பாகுபலி அனிமேஷன் தொடரில் பாகுபலியின் முகம் தோனியின் சாயல் குறித்து ராஜமவுலி பேசியுள்ளார்.
பாகுபலி
பிரபாஸ், அனுஷ்கா ராணா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனது. தெலுகு மட்டுமல்லாமல் அனைத்து மொழியிலும் கோடி கட்டி பறந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் அனிமேஷன் வெப் தொடர் உருவாகியுள்ளது. வருகின்ற 17ம் தேதி வெளியாக உள்ள இதை, கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.இதில் இயக்குநர் ராஜமெளலியுடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். ‘பாகுபலி’ திரைப்படம் தனது மனதிற்கு நெருக்கமானது என்று நெகிழ்ந்திருக்கிறார் ராஜமவுலி.
ராஜமவுலி
மேலும், இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்று நடிகர் பிரபாஸிடம் கேட்கப்பட்டிருக்கிறது.இதற்கு அவர் சிரித்துக் கொண்டே, ’இயக்குநருக்கு தான் இந்தக் கேள்வி’ என்றார். உடனே ராஜமெளலி, ”நான் எங்கு சென்றாலும் இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர்.

கண்டிப்பாக அவர்களது விருப்பம் நிறைவேறும்.இதுபற்றி, நானும் பிரபாஸூம் பேசி வருகிறோம்” என்றார். மேலும் அந்த அனிமேஷனில் வரும் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தின் முகம் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சாயலில் இருப்பதாக பலர் கூறிவந்தனர்.
இது குறித்து செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜமவுலி, “என்னைப் போலவே இதனை உருவாக்கியவர்களும் தோனியின் ரசிகர்களாக இருக்கலாம்” என்று சிரித்தபடியே கூறினார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil