அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம்: விவசாயிகள் போராட்டம் குறித்து எச்.ராஜா
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு விழா நடக்கும் நேரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. மேலும் ஒரு சில இடங்களில் காவல் துறையினருக்கும் விவசாய சங்கத்தினர்களுக்கும் இடையே வன்முறை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
நக்சல்களால் நடத்தப்படும் வன்முறை இயக்கம் என்று நான் சொன்னது உறுதியாகியுள்ளது என பாஜகவைச் சேர்ந்த எச் ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம் என்று நாம் சொன்ன போது சிலர் சந்தேகப்பட்டனர்.
அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம் என்று நாம் சொன்ன போது சிலர் சந்தேகப்பட்டனர் ஆனால் இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது நமக்கு புரிகிறது @blsanthosh pic.twitter.com/Oz7CwAHXJi
— H Raja (@HRajaBJP) January 26, 2021
ஆனால் இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது நமக்கு புரிகிறது.