திமுக தேர்தல் அறிக்கை ஒரு டிஷ்யூ பேப்பர் மாதிரி: எச். ராஜா பேச்சு

election report dmk raja
By Jon Mar 16, 2021 12:13 PM GMT
Report

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு டிஷ்யூ பேப்பர் மாதிரி என்று பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்வில் காரைக்குடி தொகுதியில் எச்.ராஜா போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நீட் தேர்வு முதலில் வந்தது காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் தான்.

முதல்வர் ஜெயலலிதா விலக்கு கேட்டார். கொடுக்கப்பட்டது. பின்பு வந்த போது ஆதரவாக கோர்ட்டில் வாதாடியது சிதம்பரம் மனைவி. முதலில் எல்லாத்தையும் இவங்களே செய்துவிட்டு பின்பு அவர்களே எதிர்த்து பேசுவாங்க இது என்ன அர்த்தம். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு பின்பு அதை எதிர்ப்பதும், பேறுகால விடுப்பு 9 மாதம் இருக்கும்.

தி.மு.க.தேர்தல் அறிக்கையில் புதிதாக ஒரு அறிவிப்பும் கிடையாது. தற்போது மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களை தெரிவித்திருக்கிறார்கள். தி.மு.க.வில் புதிய சிந்தனைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் மாதிரி தான்” என்றார்.


Gallery