சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

By Irumporai Sep 19, 2022 06:58 AM GMT
Report

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி

தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனிடையே, சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருக்கக்கூடிய எம் துரைசாமி தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வில் இருந்து விசாரித்து வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் | Raja Appointed As Chief Justice Of High Court

புதிய நீதிபதியாக டி.ராஜா

இந்த சமயத்தில், அவரும் நாளை மறுதினம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியாக தற்போது இருக்கக்கூடிய டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

வரும் 22-ஆம் தேதி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்கிறார்