ஆபாச வீடியோ தயாரித்த வழக்கு: கணவருக்கு ஜாமீன் கிடைக்க தலை முடியை ஷேவ் செய்த பிரபல நடிகை

Actor Case Shilpa Shetty Raj Kundra
By Thahir Oct 31, 2021 01:06 PM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் காதல் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை தயாரித்து விநியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தன் தலையின் பின் பக்கத்தில் இருக்கும் முடியை மட்டும் ஷேவ் செய்தார்.

ஆபாச வீடியோ தயாரித்த வழக்கு: கணவருக்கு  ஜாமீன் கிடைக்க  தலை முடியை ஷேவ் செய்த பிரபல நடிகை | Raj Kundra Shilpa Shetty Case

அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் கிடைத்தால் தலைமுடியை ஷேவ் செய்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி வேண்டியிருந்தாராம்.

இதையடுத்தே வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. ராஜ் குந்ந்ரா இப்படி ஒரு வியாபாரம் செய்வதே தனக்கு தெரியாது என்று ஷில்பா முன்பு தெரிவித்தார்.

தன் வேலையில் பிசியாக இருந்ததால் ராஜ் என்ன வியாபாரம் செய்கிறார் என்பதை கவனிக்கவில்லை என்றார். ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக ஷில்பா ஷெட்டி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்பொழுது ஷில்பா கோபப்பட்டு தன் கணவரை திட்டினாராம். நம்மிடம் எல்லாம் இருந்தும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று ராஜை திட்டினாராம். அதன் பிறகு போலீசார் தான் ஷில்பாவை சமாதானம் செய்து வைத்ததாக தகவல் வெளியானது.