சட்டத்திற்குட்பட்டே கைது - ஷில்பா ஷெட்டியின் கணவரின் வழக்கில் நீதிபதி காட்டம்!

Case Shilpa Shetty Raj Kundra
By Thahir Aug 08, 2021 10:57 AM GMT
Report

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஜாமின் மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டத்திற்குட்பட்டே கைது - ஷில்பா ஷெட்டியின் கணவரின் வழக்கில் நீதிபதி காட்டம்! | Raj Kundra Shilpa Shetty Case

ஆபாச படத் தயாரிப்பு வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஜாமின் மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் மும்பையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில், ஆபாச படங்களை தயாரித்து, மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்ததாகக் கூறி, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கைது செய்தனர். இந்த வழக்கில், ராஜ் குந்த்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது மொபைல் ஆப்களில் இருக்கும் வீடியோக்களைப் போன்ற வீடியோக்கள் அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி., தளங்களில் அதிகமாக காணப்படுவதாகவும், எனவே தன்னை கைது செய்தது சட்ட விரோதமானது எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில், ராஜ் குந்த்ரா மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனு கடந்த சில நாட்களாக நீதிபதி அஜய் கட்கரி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்த போது ராஜ் குந்த்ராவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததோடு சட்டத்துக்கு உட்பட்டே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணா, ராஜ் குந்த்ராவின் மொபைல் ஆப்களில் இருந்து அதிகப்படியான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுன. 41 ஏ சட்டப் பிரிவின் கீழ் போலீசார் ராஜ் குந்த்ரா மற்றும் ரேயான் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ரேயான் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.ஆனால் ராஜ் குந்த்ரா அதனை ஏற்கவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 41 ஏ சட்டப் பிரிவின் கீழ் அதிகபட்சமாக குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். ராஜ் குந்த்ரா சார்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.