இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று ராஜ் பவனின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம்
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தங்கும் மாளிகை ராஜ் பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த பெயரை மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, " ராஜ் பவன் என்பது காலனித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

அதனை லோக் பவன்(தமிழில் மக்கள் பவன்) என மாற்ற வேண்டும்" என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியாவில் ராஜ் பவன் மற்றும் ராஜ் நிவாஸ்களை லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் மாற்றுமாறு அதிகாரபூர்வ உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ராஜ் பவன் இனி மக்கள் பவன் என அழைக்கப்பட உள்ளது. முன்னதாக நேற்றே கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவன் லோக் பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடொன்றில் பதிவான பயங்கர துப்பாக்கி சூடு...! சுமார் 17 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம் IBC Tamil
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் IBC Tamil