‘’மழை வந்துட்டா எடுங்க அந்த தார்ப்பாய் ‘’ : திருமண சடங்கில் நடந்த விநோத சம்பவம் வைரலாகும் வீடியோ

By Irumporai Jul 07, 2022 05:21 AM GMT
Report

திருமண ஊர்வலம் என்பது இந்தியாவில் எல்லா மதத்தினராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கமான விஷயம். வட இந்தியாவில் இதனை ஒரு சடங்காகவே பின்பற்றுவார்கள் .

மழைக்கு டஃப் கொடுத்த மக்கள்

மாப்பிள்ளையை குதிரையில் அமர வைத்து , மேள தாளங்களுடன் நடனமாடியபடியே ஊர்வலமாக மண மேடைக்கு அழைத்து செல்வார்கள் . அதற்கு குறித்த நேரம் ஒன்று இருக்கிறது அந்த நேரத்திற்குள் தவறாமல் செய்துவிட வேண்டும் ,அது நம்பிக்கை.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் , திருமண ஊர்வலம் ஒன்றை விடாத மழையிலும் நிகழ்த்தியுள்ளனர் திருமண வீட்டார்.

வைரலாகும் வீடியோ

மாப்பிள்ளையை குதிரை மேல் காணவில்லை என்றாலும் கூட , மேள தாளங்கள் முழங்க , பாடல்கள் பாடியபடி , நடனமாடிக்கொண்டு சில முன்னோக்கி செல்ல , மஞ்சள் நிற நீளமான தார்பாயை குடையாக பிடித்துக்கொண்டு 20 க்கும் மேற்ப்பட்டோர் பின்னோக்கி செல்கின்றனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற அந்த வீடியோ தற்போது படு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பீர் குடிச்சா சுகர் வராதாம்..? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!