மிரட்டிய கன மழை தனித்தீவான சீர்காழி : முதலமைச்சர் இன்று ஆய்வு

M K Stalin Tamil nadu
By Irumporai Nov 14, 2022 02:16 AM GMT
Report

வராலாறு காணாத கன மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது சீர்காழி பகுதியினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

சீர்காழியில் கடும் வெள்ளம் 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பெய்த கன மழை பெய்தது.

மிரட்டிய கன மழை தனித்தீவான சீர்காழி : முதலமைச்சர் இன்று ஆய்வு | Rains Sirkhaji Turned Into A Small Island

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது, இதனால் ஒரு குட்டி தீவு போல காட்சியளிக்கின்றது சீர்காழி அதனை சுற்றியுள்ள பகுதிகளும் , குறிப்பாக சீர்காழியின் சட்டநாதர் கோவில் போன்ற பகுதிகளும்.

முதலமைச்சர் ஆய்வு

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோயில்களில் மழை நீர் புகுந்து விட்டது . இதனால் சீர்காழியில் மட்டும் ஒன்பது நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையினால் அதிகம் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் : வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நாளை சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.