மீண்டும் மழை - வானிலை மையத்தின் முக்கிய அலெர்ட்
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மீண்டும் மழை
மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைதிரும்பவும் உத்தரவிடப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இதையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரையிலிருந்து 100 முதல் 500 மீட்டர் தொலைவில் படகுகளை நிறுத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.