இந்த 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை..!

Chennai TN Weather Weather
By Thahir Dec 18, 2022 07:30 AM GMT
Report

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டப்போகும் மழை

வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rainfall in 9 districts in next 3 hours

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.