ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் உயிர்காக்கும் விழிப்புணர்வு வாக்கத்தான்

Chennai
By Karthikraja Aug 10, 2025 06:25 AM GMT
Report

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, மக்களிடையே ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில், பெசன்ட் நகர் கடற்கரையில் வாக்கத்தான் நடைபெற்றது. 

rainbow children

எண்ணற்ற இளம் உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றலைக் கொண்ட குழந்தைகளுக்கான உறுப்பு தானத்திற்கு ஆதரவாக நடந்த இந்த வாக்கத்தானில் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

சுகாதார உணர்வுமிக்க சமூகத்தை உருவாக்கும் கூட்டு முயற்சியாக ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை நடத்திய இந்த வாக்கத்தானை பிரபல நடிகையும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருமான தேவயானி கொடியசைத்து துவக்கி வைத்தார். உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 300 பேர் பங்கேற்று அங்குள்ள போலீஸ் பூத்திலிருந்து தலப்பாக்கட்டி ஓட்டல் வரை நடந்து சென்று திரும்பி வந்தனர்.

உடல் உறுப்பு தானம் என்பது பலரது வாழ்க்கையில் மிகப்பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதேசமயம் அது குழந்தைகள் என்று வரும்போது அந்த பிஞ்சு உள்ளங்களின் வாழ்க்கையை மலரச் செய்வதால் அது இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் உயிர்காக்கும் விழிப்புணர்வு வாக்கத்தான் | Rainbow Childrens Hospital Drive Walkathon Chennai

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3000 குழந்தைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, ஆனால் அது சம்பந்தமான குறைந்த விழிப்புணர்வு, தாமதமான பரிந்துரைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றின் காரணமாக அது குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவரும் பலன் அடையும் வகையில் அது குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடைபயணத்திற்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை ஏற்பாடு செய்தது.

தேவைக்கும் கிடைக்கும் தன்மைக்கும் இடையில் அதிக இடைவெளி உள்ளது, மேலும் பெறப்படும் உறுப்பை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பதும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை இந்தத் துறையில் உறுதியாக சிறப்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்றுவரை அதன் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனைகளில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இது, எண்ணற்ற குடும்பங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் அதே வேளையில், மோசமான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்கு கூடுதலாக, ரெயின்போ மருத்துவமனை, பொதுமக்களிடம் புரிதலை மேம்படுத்தவும், தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும், நன்கொடையாளர் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தீவிரமாக செயல்படுகிறது. இந்த நடைபயணம் வெறும் அடையாள நடைபயணமாக மட்டுமல்லாமல், விழிப்புணர்வு, சரியான நேரத்தில் நடவடிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது.

குறிப்பாக அவசர மற்றும் சிக்கலான மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு உறுப்பு தானம் என்பது ஒரு முக்கியமான, உயிர்காக்கும் செயலாகும், இந்த நடைபயணம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை உறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்றது. ஒவ்வொரு உறுதிமொழியும், உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கும், சரியான நேரத்தில் அவற்றைப் பெறுபவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது குறித்து ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசகர் டாக்டர் சோமசேகர கூறுகையில், இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, உறுப்பு தானம் என்பது ஒரு முக்கியமான, உயிர்காக்கும் செயல் என்பதை வலியுறுத்துகிறோம், குறிப்பாக அவசர மற்றும் சிக்கலான மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. இந்த நடைபயணம் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை நன்கொடையாளர்களாக மாற ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.