இந்திய அணியை கட்டமைத்தது தோனி இல்லை. மனம் திறந்த சுரேஷ் ரெய்னா

Dhoni Ganguly Raina Dravid
By mohanelango Jun 14, 2021 07:24 AM GMT
Report

முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதில் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாத ரெய்னா 2020 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.

ரெய்னா தன்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தக்கத்தில் தான் தோனியுடன் நெருக்கமாக இருந்ததால் தான் இந்திய அணியில் இடம் கிடைத்ததாக பலரும் விமர்சித்தது பற்றி கவலை தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த புத்தகத்தில் இந்திய அணியை கட்டமைத்தது தோனி, கங்குலி இல்லை டிராவிட் தான் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்திய அணியை கட்டமைத்தது தோனி இல்லை. மனம் திறந்த சுரேஷ் ரெய்னா | Raina Reveals Dravid Captaincy Impact

டிராவிட் எப்போதும் ஒரு குடும்பம் போல்தான் எங்களை நடத்துவார். இளம் வீரர்கள்தான் டிராவிட்டுக்கு எப்போதும் முக்கியம். டிராவிட்டின் கீழ் முதிர்ச்சியடைந்தவர்கள் தான் பின்னர் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார்கள்.

தோனி, இர்பான் பதான், நான், யுவ்ராஜ் சிங், பியூஷ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், முனாப் படேல், ஸ்ரீசாந்த் அனைவரும் ராகுல்பாயின் மேற்பார்வையில் வளர்ந்தவர்கள்.இந்திய கிரிக்கெட்டின் முகமாக நாங்கள் இருப்போம் என்பதை ராகுல் திராவிட் ஆழமாக நம்பினார்.

பொதுவாக 10-15 ஆண்டுகளில் எழுச்சி பெற்ற இந்திய அணியைப் பற்றி பேசும்போது அதற்கான பெருமையை தோனிக்கோ, கங்குலிக்கோ சேர்ப்பதையே நாம் பார்த்திருக்கிறோம். இந்த அணியை தாதா உருவாக்கினார் என்று நான் கூற மாட்டேன்.

அவரும் தோனியும் கேப்டனாக தாக்கம் செலுத்தினர் அவ்வளவே. ஆனால் 3 வடிவங்களுக்கும் இந்திய அணியைத் தயார் செய்தது என்றால் அது ராகுல் திராவிட் தான் என்றே கூறுவேன்” என்றுள்ளார்