2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? - உறுதியாக சொல்லும் சுரேஷ் ரெய்னா
தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.
தோனி
ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று, 7 போட்டிகளில் தோல்வியடைந்து, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தோனிக்கு 43 வயதான நிலையில், ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதால், மீண்டும் தோனி சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்த தொடரிலேயே தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளாரா என தகவல் வெளியானது.
சுரேஷ் ரெய்னா
இந்நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஐபிஎல் ஏலத்திலேயே சென்னை அணி தோற்றுவிட்டது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நல்ல வீரர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க ஏன் ஆர்வம் காட்டவில்லை என எனக்கும் தெரியவில்லை.
ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை தோனிதான் எல்லாவற்றையும் முடிவு செய்வதாக நினைக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. வீரர்கள் தேர்வு முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.
அதேபோல், சென்னை அணி நிச்சயம் மீண்டு வரும். தோனி நிச்சயமாக அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார்" என கூறினார்.