ஐபிஎல் தொடரில் இருந்து ஒதுக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா - கடைசியில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

CSK msdhoni sureshraina chennaisuperkings ஐபிஎல் 2022 MaldivesSportsAwards2022 சுரேஷ்ரெய்னா
By Petchi Avudaiappan Mar 20, 2022 09:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் இருந்து நட்சத்திர வீரர்  சுரேஷ் ரெய்னா ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதற்காக கடந்த பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. 

இதில் சென்னை அணியை சேர்ந்த மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க சென்னை அணி உட்பட எந்த அணியும் முன் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை எடுத்த முதல் வீரர் உள்ளிட்ட பல சாதனைகள் படைத்த அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வருத்தப்பட்டனர். 

அதேசமயம் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜேசன் ராய் விலகியதை அடுத்து அந்த இடத்தில் சுரேஷ் ரெய்னாவை விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அது நடக்கவில்லை. 

இப்படி கிரிக்கெட்டில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட ரெய்னாவுக்கு இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுகள் கௌரவ விருது வழங்கி பாராட்டியுள்ளது. கடந்த 10 வருடங்களாக விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக அவருக்கு மாலத்தீவு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான “ஸ்போர்ட்ஸ் ஐகான்” எனும் கௌரவ விருதை அந்நாட்டு விளையாட்டுத்துறை அளித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.