இன்னும் 6 மணிநேரத்தில்! இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கி, வடமேற்கு திசை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.