சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை..! 2 மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!
chennai
rain
tnrain
By Anupriyamkumaresan
சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் 2 மணிநேரம் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.