ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடப்பதில் சிக்கல்... நடக்காமல் போனால் வெற்றி யாருக்கு?

Gujarat Titans Rajasthan Royals TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 23, 2022 07:18 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

கொல்கத்தாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

இதனிடையே ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் 2 போட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. 

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடப்பதில் சிக்கல்... நடக்காமல் போனால் வெற்றி யாருக்கு? | Rain Threatening Ipl Playoffs In Kolkatta

வானிலை மையம் அறிக்கையில் இந்த வாரம் முழுவதும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவும் தற்போது நேரமில்லை என்பதால் பிசிசிஐ குழம்பி வருகிறது. 

ஒருவேளை ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்த அணிகள் அடுத்த போட்டிக்கு தகுதி பெறும். அதாவது லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்த குஜராத் அணி நேரடியாக பைனல் செல்லும். ராஜஸ்தான் குவாலிஃபயர் 2 போட்டிக்கு அனுப்பப்படும்.