200 ஆண்டுகளில் இல்லாத அளவில் பிப்ரவரி மாதத்தில் அதிக மலைக்கு வாய்ப்புள்ளது
தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவில் வருகிற பிப்ரவரி மாதத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் கனமழை பொழிந்தது.
இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதத்தில் மழையை விட பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிகபட்ச மழையை சந்தித்தோம். அதுவும் டெல்டா பகுதிகள் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
கடலூரில் பிப்ரவரி 2000ல் அதிகப்படியான மழை பெய்திருந்தது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை 1984ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிகப்படியான மழை பெய்தது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இது கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அதிகப்படியான மழை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 2000ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் நல்ல மழை பெய்ததாக வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.