தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
chennai
disaster
flood
By Jon
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரிக்கடலை ஒட்டிய வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.