தமிழக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
tamil
city
madurai
By Jon
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தென் மாநிலங்களில் இருந்து வரும் 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.