அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக கடந்தாண்டு தாமதமாக தோடணியை பருவமழை இந்தாண்டு ஜனவரி 19ம் தேதி வரை நீடிப்பதர்க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.